எளிய மனிதர்களின் பெரிய சேவை- பிரதமர் பாராட்டு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டதையடுத்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு காலை 6 மணி முதல் பகல் ஒரு மணிவரை மளிகை காய்கறி, பால் பார்சல் மட்டும் தரும் உணவகங்கள் குடிநீர் வினியோகம், பெட்ரோல் நிலையங்கள் போன்றவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இக்கட்டான சூழ்நிலையில் நாடே வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நிலையில் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவது சிறு வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் மனிதநேய செயலை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். சின்ன கடைக்காரர்களும் வியாபாரிகளும் தங்கள் உயிரை பணயம் வைத்து பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

 

அவர்கள் அப்படி செய்யாமல் இருந்தால் என்ன ஆகும் என்று எண்ணிப்பாருங்கள் என்று மோடி தெரிவித்துள்ளார். நாடு அவர்களின் சேவையை என்றைக்கும் நினைவில் வைத்திருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வரும் காலங்களிலும் அனைத்து கடைகளிலும் சமூக தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது என்று மோடி தெரிவித்தார்.

 

முன்னதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட மோடி கொரொனா மதமோ, ஜாதியோ, இனமோ மொழியோ, எல்லையோ கிடையாது எனக் கூறியுள்ளார். அது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றும் நாம் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக இருந்து எதிர்த்து போராட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply