“தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு!!” சென்னையில் மட்டும் 50 பேருக்கு உறுதியானது!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 105 ஆக எகிறியுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் அன்றாட கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத் துறை சார்பில் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு வந்தது. இன்று சென்னையில் செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இனிமேல் செய்தியாளர் சந்திப்பு கிடையாது எனவும், அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால்
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 21,381 பேர் உள்ளனர். அரசுக்கண்காணிப்பில் 20 பேர் உள்ளனர் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூரில் 10 பேருக்கும் கோவையில் 5, திண்டுக்கல்லில் 5/ நெல்லையில் 2 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதில் சென்னையில் பாதிக்கப்பட்ட 50 பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் 2 பத்திரிகையாளர்கள், 2 காவல்துறையினர், 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Leave a Reply