கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதா ..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டதா என்பது குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன கொரொனா வைரஸ் எப்படி உருவானது என்பது மட்டும் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகிறது.

 

உகான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் அங்குள்ள மீன் சந்தையில் உருவாகவில்லை என்றும், மாறாக சீன ஆய்வகத்தில் தோற்றுவிக்கப்பட்ட இருக்கலாம் எனவும் அமெரிக்கா சந்தேகித்து வருகிறது. உகான் ஆய்கத்தில் வைரஸ் தொடர்பான பரிசோதனையின்போது கொரொனா வெளிப்பட்டு இருக்கலாம் என அமெரிக்கா கூறி விட்டதாகவும் அதனை உறுதிப்படுத்திக் ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது .

 

இந்த நிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக சீனா மறுத்து வருகிறது. கொரொனா வைரஸின் பிறப்பிடம் மற்றும் பரவல் முறையை மறைக்கவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆய்வகத்தில் மனிதனின் தவறால் கொரொனா உருவானது என்பதற்கு ஆதாரம் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கொரொனா வைரஸ் உருவான விதம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகுந்த ஆதாரங்களோடு அறிவிக்கும் வரை யூகங்கள் தொடரத்தான் செய்யும்.


Leave a Reply