கொரொனா குறித்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பேஸ்புக்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொடர்பாக வதந்திகளை லைக் செய்யும் பயனாளர்களுக்கு அவை உண்மைக்குப் புறம்பான தகவல்கள் என்பதை சுட்டிக்காட்டும் வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கேத்தி பேக்ட்ஸ் என்ற திட்டத்தை 12 மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

அதன்படி ஃபேஸ்புக்கில் பயனாளர்கள் கொரொனா குறித்து தவறான தகவல்களை பதிவிட்டாலோ அல்லது மற்றவரால் பதிவிடப்படுவதை பகிர்ந்தாலோ இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என பாப் அப் செய்து எச்சரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரொனா வைரஸ் சிகிச்சை தொடர்பான போலி விளம்பரங்கள் மற்றும் குணப்படுத்துவதற்கான மருந்து என பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.


Leave a Reply