ஞானேஷ்குமாருக்கு எதிராக சென்னையில் இன்று இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக, சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. SIR விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர், மாணவ சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தவெக, விசிக, மதிமுக, ஐயுஎம்எல், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கின்றனர். தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெற்றிருப்பதாக காங்கிரஸ் மற்றும் தவெக தலைவர்கள் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





