இராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்து மரியாதை!!

Publish by: கே.மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் கொரோனா தொற்று நோய் ஏற்படாதவாறு மக்களுக்காக சிறப்பாக சேவையாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் திடக்கழிவு பணியாளர்களை கௌரவ படுத்தும் வகையில் அவர்களுக்கு பாத பூஜை செய்து மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.

மேலும் ஆண் பணியாளர்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் பெண் பணியாளர்களுக்கு சேலையும், ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து கிலோ அரிசி, பூ பழம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

இதனை ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் துணை தலைவர் ஜெகத்ரட்சன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏற்பாடு செய்தனர் இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.


Leave a Reply