உணவு வழங்குபவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள தடை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ராஜஸ்தானில் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி உதவுபவர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்ள அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் அவர்களால் உணவு பொட்டலங்கள் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்குவது என்பதை சரியாக கருதவேண்டும் என்றும் அதனை விளம்பரத்திற்காக போட்டி மனப்பான்மையுடனும் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து உணவுப்பொருட்களை வழங்குவதில் ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுக் பொது மக்களுக்கு உதவ முன்வருமாறு தொண்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply