பாம்பின் பல்லை பிடுங்கி சீன் போட்டவர்…வனத்துறை அதிகாரிகளிடம் சிக்கினார்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருவள்ளூர் மாவட்டம் குன்னூரில் ஊரடங்கால் மனிதர்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் வலம் வந்த உள்ளூர் நாகப்பாம்பு ஒன்று காக்களூர் பகுதியில் வேலை பார்த்து வரும் மதுரையை சேர்ந்த சினேக் பாபு வான யுவராஜிடம் சிக்கியது. வித்தை காட்டி விட்டு, விட்டு விடுவார் என எதிர்பார்த்த நிலையில் நாகப்பாம்பை மல்லாக்க படுக்க வைத்து விஷப் பற்களை ஒவ்வென்றாக பிடுங்கி எறிந்து விட்டார்.

 

பல்லைப் பிடுங்கிய பின்னரும் நாக பாம்பை வைத்து விளையாட்டு காட்டுவதாக கூறிய யுவராஜ் அதனை வளர்க்க போவதாக கூறி கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். மதுரையில் தனது வீட்டில் மேலும் இரண்டு பாம்புகளை வளர்த்து வருவதாக கெத்தாக தெரிவித்த யுவராஜ் நாளை நடக்கப்போகும் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் சோகம்.

பாம்புகளை அடைத்து வைத்து வளர்ப்பதும் காட்சிப்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றம். அப்படி இருக்க பாம்பை பிடித்து பல்லை பிடுங்கி கொஞ்சம் ஓவராகவே நடந்து கொண்டுள்ளார். ஊரடங்கு மக்கள் வீட்டிற்குள் அடங்கியிருக்க காட்டிற்குள் ஒருபுறம் சிக்காததால் கடும் வறட்சியில் காணப்படும் வனத்துறை அதிகாரிகளிடம் வழியே சென்று சிக்கியுள்ளார் யுவராஜ்.

 

பாம்பும் நம்மைப் போன்ற உயிரினம் தான். அதற்கும் பசி, கோபம், வலி எல்லாம் உண்டு. நம்மை ஒருவர் பிடித்து வைத்து பற்களை ஒவ்வொன்றாக பிடுங்கி எறிந்தாள் எவ்வளவு வலியும், வேதனையும் இருக்கும் என்பதை உணர்ந்தாலாவது இதுபோன்ற விபரீத செயலில் ஈடுபடுவதை கைவிடுங்கள். இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்பதை உணருங்கள்.


Leave a Reply