--- --:--:-- --

கொரோனா தொற்று : பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசம்..! ஐசியுவில் தீவிர சிகிச்சை!!

1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல் நிலை குறித்து இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் விசாரித்தனர்.

 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ், உலக பிரபலங்கள் பலரையும் தொற்றியுள்ளது. 10 நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியுடன் தம்மை தனிமைப்படுத்துவதாக அறிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டதால் கடந்த சனிக்கிழமை லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

நேற்று மாலை அவருடைய உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நிலையில், ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். போரிஸ் ஜான்சன் சுய நினைவுடன் இருப்பதாகவும், வெண்டிலேட்டர் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ள மருத்துவர்கள், அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே, போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசமானது குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் மோடி, பிரிட்டன் துணை பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போரிஸ் ஜான்சனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், தமது நெருங்கிய நண்பரான போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில நாட்களாக பிரிட்டன் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. இது வரை 5373 பேர் உயிரிழந்த நிலையில், பாதிப்பு மேலும் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலையும் மோசமடைந்துள்ளது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon