ஏப்ரலில் 3 நாட்களுக்கு மலேசியாவுக்கு சிறப்பு விமான சேவை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு அவசரகால விமான சேவை ஏப்ரல் முதல் வாரத்தில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

இந்தநிலையில் அவசரகால சேவையாக ஏப்ரல் 1, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 4 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிறப்பு விமானம் மலேசியாவுக்கு இயக்கப்பட உள்ளது. மலேசியாவில் இருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11.25
மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நூற்றுக்கும் மேற்பட்ட மலேசியத் தமிழர்கள் கடந்த 12 நாட்களாக மலேசியாவுக்கு செல்ல முடியாமல் திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் தங்கியுள்ளனர். இவர்களை மலேசியா அழைத்துச் செல்ல விமான சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் மத்திய அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.

 

இந்த நிலையில் திருச்சியில் இருந்து மூன்று தினங்களுக்கு மலேசியாவிற்கு  விமான சேவை இயக்கப்படுகிறது. இது குறித்து பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply