ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கும் தேதி அறிவிப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக விளையாட்டு முடங்கியுள்ளது.

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடக்க விருந்தது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து இந்த ஆண்டு நடைபெறவிருந்த போட்டிகளுக்காக டிக்கெட் வாங்கியவர்கள் அதனை அடுத்த ஆண்டு உபயோகித்துக் கொள்ளலாம் என்றும் ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.


Leave a Reply