கொரோனா பாதிப்பு குறைத்து கூறப்படுவதாக அதிர்ச்சி தகவல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


உலக நாடுகள் கூறும் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதத்திற்கும் குறைவான அளவையே வெளிஉலகிற்கு சொல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

எபோலா, சார்ஸ் உள்ளிட்ட நோய் தொற்றுகளை போலல்லாமல் கொரொனா அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாகவே அல்லது லேசான அறிகுறிகள் உள்ள போதே நிறைய பேருக்கு பரவி விடுகிறது என தொற்று நோய் பரவல் கணித பகுப்பாய்வு வல்லுனர் ஆடம் தெரிவித்துள்ளார்.

 

இதனால் யார் யாருக்கு கரோனா வைரஸ் பரவி இருக்கிறது என்பதை அடையாளம் காண்பது கடினமாக விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மக்கள் அடர்த்தி மிகுந்த நாடுகளில் கூறப்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை இதனால் சந்தேகம் அளிப்பதாகவும் ஐந்தில் ஒருவர் பற்றிய தகவல்கள் வெளிவருகின்றன என்ற பட்சத்தில் வைரசின் வலிமை அதிகம் என்பது தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply