தமிழகத்தில் வீட்டு வாடகை ரத்து ஆகுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பணிக்கு செல்ல முடியாததால் வீட்டு வாடகை கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. டெல்லியில் வீட்டு வாடகையை கொடுக்க முடியாதவர்களின் அடுத்த மூன்று மாதத்திற்கான வாடகையை அரசு ஏற்கும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.

 

இதேபோல் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகையை வசூலிக்கக் கூடாது என வீட்டு உரிமையாளர்களுக்கு நொய்டா மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உத்தரவை மீறி வீட்டு வாடகை வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நொய்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்துள்ள தமிழகத்தில் வீட்டு வாடகை ரத்து செய்யப்படுமா என்று வாடகைதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். கொரொனா தமிழகத்தில் பெருமளவு பாதிப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply