சீனாவில் கிருமிகள் ஆயுத கிடங்கை உள்ளது…எழுத்தாளர் குற்றச்சாட்டு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுதக் கிடங்கை வைத்துள்ளதாகவும் அதிலிருந்தே கொரொனா வைரஸ் வெளியேறியதாகவும் அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவன் டியூபரோஸ் மோசர் என்கிற எழுத்தாளர் நியூயார்க் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில் சீனாவின் நுண்ணுயிரி ஆய்வகம் இருப்பதாகவும் அங்கு பல கிருமிகளை சீனா வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

கொரொனா பரவுவதை தொடர்ந்து சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரொனா வைரஸ் போன்று புதிய மேம்பட்ட கொரொனா வைரஸ்களை யூ வகையில் நுண்ணுயிரி ஆய்வகங்களில் பாதுகாப்பு நிர்வாகத்தில் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையே ஸ்டீம் தனது வாதத்திற்கு ஆதரவாகவும் மேலும் அண்மையில் நடைபெற்ற அவசர கூட்டம் ஒன்றில் பேசிய சீன அதிபர் எதிர்காலத்தில் கொரொனா வைரஸ் தாக்குதல் போன்ற தாக்குதல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

இதன்மூலம் தங்களிடம் கொடூர கிருமிகள் பாதுகாக்கப்பட்டு வருவதை சீன அதிபர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply