ஊரடங்கு உத்தரவை மீறி மசூதியில் திரண்டவர்கள் மீது தடியடி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியில் உள்ள மசூதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திரண்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதை மீறி பெல்காம் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் வெளியேற்றினர். அப்போது வெளியேற மறுத்தவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.

 

கூட்டமாக ஓரிடத்தில் கூடும் போது அவர்களில் ஒருவருக்கு கொரொனா இருந்தாலும் அது மற்றவர்களுக்கும் பரவ கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தனித்திருத்தல் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

 

இதனை மீறினால் போலீசாரின் தக்க தண்டனையை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.


Leave a Reply