கண்ணா லட்டு தின்ன ஆசையா பட கதாநாயகர் மரணம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நடிகரும் மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 37. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சேதுராமன். எம்பிபிஎஸ் படித்த தோல் சிகிச்சை நிபுணரான இவர் நேற்று இரவு சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேதுராமன் உயிரிழந்தார். சேதுராமனுக்கு இமையாழ் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

 

இளம்வயதிலேயே நடிகர் சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினரும், மருத்துவத் துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply