கொரொனாவுக்கு சிகிச்சை அளித்த 37 மருத்துவர்கள் உயிரிழப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இத்தாலியில் கொரொனா வைரசுக்கு சிகிச்சை அளித்த 37 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

 

இந்த கொடிய வைரஸ் தாக்கிய இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டோர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

இதில் இதுவரை 37 மருத்துவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மட்டும் இத்தாலியில் 512 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டியுள்ளது.


Leave a Reply