80,000 மதிப்புள்ள புதிய கொரோனா பரிசோதனை கருவி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ள புதிய கொரொனா பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. புனேவை சேர்ந்த மைலப் டிஸ்கவரி சொல்யூஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ள அந்தக் கருவியின் மதிப்பு 80 ஆயிரம் ரூபாய் என்றும் ஒரு கருவியின் மூலம் 100 பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைக்கு ஆகும் நேரத்தை விடபாதி அளவு நேரத்திலேயே புதிய கருவி மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கருவிகளை விட கால் பங்கு விலை கொண்ட இந்த கருவியை அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

அந்த நிறுவனம் ஒரு வாரத்திற்குள் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் கருவிகளை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.


Leave a Reply