செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


செய்தித்தாள்கள் மூலம் கொரொனா பரவுவதற்கு குறைவான சாத்தியமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களை பல்வேறு நபர்களும் தொடுவதால் அதன்மூலம் கொரொனா பரவலாம் என்ற சந்தேகம் பலருக்கும் நிலவுகிறது.

 

இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உலக சுகாதார அமைப்பு பல்வேறு சூழ்நிலைகள் ,தட்பவெப்ப நிலைகளில் எடுத்து வரப்படும் பொருட்கள் மூலம் கொரொனா பரவ குறைவான சாத்தியமே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

அதேநேரத்தில் இந்திய மருத்துவ சங்கமுன்னாள் தலைவரான கே கே அகர்வால் செய்தித்தாள்களும் மற்றும் பொருட்கள் போன்றதுதான் என்றும், ஆதலால் செய்தித்தாள்களை வாசிக்கும் முன்பும் வாசித்த பிறகும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.


Leave a Reply