கொரொனா தடுப்பு பணிகளுக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழக அரசின் கொரொனா தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகள் வாங்க 3 கோடி ரூபாய் வழங்குவதாக எம்பியும், பாமக இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

 

கொரொனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான கருவிகள் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் கொரொனா நோயை கட்டுப்படுத்த தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் பொருட்டு தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல் கட்டமாக மூன்று கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. தேவையைப் பொறுத்து அடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Leave a Reply