கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூர் சிகிச்சைக்கு மறுப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்படைந்த பாலிவுட் பாடகி கனிகா கபூர் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் நிலையில் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்காமல் அமளியில் ஈடுபடுவதாக மருத்துவமனை நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளது .

 

கழிவறையுடன் கூடிய தொலைக்காட்சி வசதி உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டிருக்கும் கனிகா கபூருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக லக்னோவில் மருத்துவமனை இயக்குனர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

இதனிடையே கனிகா கபூர் தங்கியிருந்த நட்சத்திர விடுதி, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை மூடி சீல் வைக்கப்பட்டு அங்கு கிருமிநாசினிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கனிகா கபூர் உடன் தொடர்பு கொண்ட முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சோதனை நடைபெற்றது. இதில் 27 பேருக்கு கொரொனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply