ஊரடங்கு உத்தரவு: தமிழகம் முழுவதும் பால் தடையின்றி கிடைக்கும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு கடை பிடிக்கப் பட்டாலும் தமிழகம் முழுவதும் பால் தடையின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடைகள் அடைக்கப்படும் எனவும் பேருந்து மெட்ரோ ரயில் உள்ளிட்டவை இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதைப்போல பால் விற்பனையும் நடக்காது என சில முகவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பால் தடையின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் பால் மற்றும் பால் பொருட்கள் ஆகியவை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply