“நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறோம்!!” சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!
நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரத்தியோக உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்பு சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வருகிறோம். இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு குறைந்துவிட்டது.நீட் அறிமுகமான பின்னர் தமிழக மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும் நிலை குறைந்து விட்டது. நீட் பிரச்சனைக்கு தீர்வு காண கடுமையான சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம் என முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.






