--- --:--:-- --

வரும் 31 ஆம் தேதியுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க சபாநாயகர் முடிவு

10

கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவுறுத்தியுள்ளார். வரும் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அறிவுறுத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இது தொடர்பாக சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது வரும் 31-ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

 

31-ஆம் தேதி வரை காலை, மாலை என இருவேளைகளிலும் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் எனவும், அதன் பிறகு கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படும் எனவும் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon