கொரோனாவால் இந்தியாவில் மேலும் பலர் பாதிப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரொனா சந்தேகத்தின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட 15,706 மேற்பட்ட ரத்த சளி மாதிரிகளில் 14 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பரிசோதனையில் இதுவரை 271 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

258 பேரில் 219 பேர் இந்தியர்கள் என்றும், 39 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் 23 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி டெல்லி, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சண்டிகர், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களிலும் பரவியிருந்தது.

 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இன்றைய புள்ளிவிவரங்களில் 19 மாநிலங்களிலும். மூன்று யூனியன் பிரதேசங்களிலும் கொரொனா இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அந்த புள்ளிவிவரங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 இந்தியர்கள் மூன்று வெளிநாட்டவர் என மொத்தம் 52 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply