மத்தியபிரதேச சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மத்திய பிரதேச சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு கூறுமாறு முதல்வர் கமல் நாத்திற்கு ஆளுநர் இரண்டுமுறை உத்தர விட்டாலும் அது சபாநாயகரின் முடிவு என்று கமல்நாத் கைவிரித்து விட்டார்.

 

இந்த நிலையில் மத்திய பிரதேச சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிம்ரன் சிங் சவுகார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை முடிக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply