இயல்பு நிலைக்கு திரும்பிய சீனா! சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் கொரொனா தாக்கம் குறைய தொடங்கியுள்ள நிலையில் முக்கிய சுற்றுலாத்தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரி 28 மாகாணங்களில் உள்ள 3 ஆயிரத்து 711 முக்கிய சுற்றுலா தலங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

 

சூரிய ஒளியை பொது மக்கள் அனுபவிக்கும் வகையில் மலைப்பிரதேசங்கள், நீரோடைகள் உள்ளிட்ட திறந்தவெளி சுற்றுலா தளங்களுக்கு பெரும்பாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவது நோய் பரவும் அபாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply