கொரோனா எச்சரிக்கை: சர்வதேச விமானங்கள் இந்தியா வர தடை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் எதிரொலியால் வரும் 22 ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவிற்கு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை தவிர மற்றவர்களை காண ரயில் மற்றும் விமான கட்டணச் சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலேயே இருந்த பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

அவசர அத்தியாவசிய பணிகளை தவிர மற்ற பணிகளில் இருப்போர் வீட்டிலேயே இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருக்குமாறும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வழி காட்டியுள்ளது.


Leave a Reply