அமிதாப்பச்சனின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கொரொனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது .மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் கொரொனா வைரஸ் பரவல் குறித்தும் அதனை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அமிதாப்பச்சன் எடுத்துரைக்கிறார்.

 

மேலும் தனி நபர் ஒவ்வொருவரும் நோய் தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் அமிதாப்பச்சன் அந்த வீடியோவில் விளக்கிக் கூறுகிறார். ஏற்கனவே வெளியிட்ட பதிவுகள் மூலம் தன்னிச்சையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அமிதாபச்சன் இந்த விழிப்புணர்வு வீடியோவிலும் நடித்துள்ளார்.


Leave a Reply