தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட பி.வி.சிந்து

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இங்கிலாந்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற பின் பிவி சிந்துவும் தேசிய தலைமை பயிற்சியாளர் கோபிசந்தும் துபாய் வழியாக ஹைதராபாத்துக்கு திரும்பினார்.

 

இந்த நிலையில் தெலுங்கானா அரசின் அறிவுறுத்தலின்படி இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் பரவலை தடுக்கும் பொருட்டு தனது பயிற்சி மையத்தை கோபிசந்து மூடி உள்ளார்.


Leave a Reply