சிவகங்கையை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார் .
சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரி என்பவரும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த நிர்வினும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு மணமகளின் பெற்றோர் சம்மதிக்காத நிலையில் மணமகனின் பெற்றோர் சம்மதத்துடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருவருக்கும் நேற்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.