எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி! தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் உயிரை துச்சமென மதித்து மனிதநேயத்துடன் காப்பாற்றிய காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களிடம் பாராட்டுகளை குவித்து வருகிறது.

 

தீயார்பகீர் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் இந்த அற்புத சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்னிஸ் என்ற பெயர் கொண்ட அந்த பத்து வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது நாயின் சப்தம் கேட்டு நின்றான்.

 

பின்னர் அந்த நாயின் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்து சிறுவன் அருகில் இருந்த எண்ணெய் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது அங்கே எண்ணெயில் நாய்குட்டி சிக்கி தவிப்பது தெரியவந்தது.

 

இதனையடுத்து மற்ற நண்பர்கள் உதவியுடன் அந்த கிணற்றுக்குள் தலைகுப்புற தொங்கியபடி சென்ற என்னிஸ் நாய்க்குட்டியை எண்ணெய் குழம்பில் இருந்து காப்பாற்றி அருகில் இருந்த குளத்திற்கு என்று சென்று சுத்தப்படுத்தினார்.


Leave a Reply