கியாஸ் நிலையம் அமைக்கும் விவகாரத்தில் முறைகேடு
கேஸ் நிலையம் தொடங்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பெயரில் போலியாக தடையில்லாச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிர்ச்சி தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை சின்னமலையை சேர்ந்த ஸ்டீபன் டென்னிஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதே போன்ற ஒரு நிகழ்வு மயிலாப்பூரில் நிகழ்ந்ததாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் போலி சான்றிதழ் விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை என்றும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இரண்டு வாரங்களில் விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




