--- --:--:-- --

மனைவி நடத்தையில் சந்தேகம்! 10 மாத பெண்குழந்தையை கொலை செய்த தந்தை

7

தேனி அருகே 10 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக கூறப்படும் தந்தையை போலீசார் கைது செய்தனர். சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், அழகுமணி தம்பதி இவர்களுக்கு 4 வயதில் மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர். மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தம்பதிக்குள் அடிக்கடி சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கோடாங்கிபட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற பன்னீர்செல்வம் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு தனது 10 மாத பெண் குழந்தையை தூக்கி சென்று தனியார் கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது. குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon