காலர் டியூனில் கொரோனோ விழிப்புணர்வு தமிழில்?
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொலைபேசி காலர் டோன்களை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 விநாடிகளுக்கு ஜியோ , பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் காலர் டொன்களை வெளியிட்டுள்ளது.
ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட தொலைபேசி எண்களை அழைக்கும்போது கொரோனா விழிப்புணர்வின் காலர் டோனுக்கு பின்னரே குறிப்பிட்ட எண்ணுக்கான அழைப்பு மணி ஒலிக்கிறது. விழிப்புணர்வு காலர் டோன்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே ஒலிக்கின்றன. மேலும் தொலைபேசி அழைப்பு மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு அந்த தொலைபேசி நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
பொதுமக்களின் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு காலர் டோன் மற்றும் அவற்றின் அழைப்புகள் இரு மொழிகளில் மட்டும் ஒலிப்பதால் பெரும்பாலானோரை சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நூல்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




