கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். பணியிலிருந்து திரும்பிய கணவன் மனைவி மற்றும் குழந்தைகள் விமான நிலையத்தில் நடைபெற்ற பரிசோதனையில் அந்த குழந்தைகள் வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.

 

இதனையடுத்து குளத்திலுள்ள கலம்செரி மருத்துவமனையில் அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டார்கள் குழந்தையின் மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பெற்றோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

ஏற்கனவே கேரளாவில் 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினார்கள். பத்தனம்திட்டா விலுள்ள பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டு இருப்பதாகவும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply