--- --:--:-- --

பாஜக அமைச்சர் மகளின் கல்யாணத்துக்கு 500 கோடி செலவு!

8.2

கர்நாடகாவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகள் திருமண விழாவை 500 கோடி ரூபாய் செலவில் தொடர்ச்சியாக ஒன்பது நாட்களுக்கு மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் வருகிற ஐந்தாம் தேதி நடக்க உள்ள திருமணத்திற்காக கடந்த 27ஆம் தேதி முதல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

 

செந்தூரம், குங்குமம், சந்தனம், அரிசி உள்ளிட்டவை அடங்கிய ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. விழாவிற்காக ஹம்பியில் உள்ள புகழ்பெற்ற விருபாக்ஷி கோயிலை மாடலாக கொண்டு 4 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட செட் போடப்படுகிறது.

மணமகள் ரக்ஷிதாவிற்காக மேக்கப் பணிகளை மேற்கொள்ள நடிகை தீபிகா படுகோனே மேக்கப் மேன் அடைக்கப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தின் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தவர்களை இந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon