--- --:--:-- --

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாவிலிருந்து வெளியேற மோடி முடிவு

9

உலக அளவில் டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு அடுத்த இடத்தில் மோடி உள்ளார் . ட்விட்டரில் 5 கோடியே 33 லட்சம் பேரும், பேஸ்புக்கில் 4 கோடியே 40 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் மூன்று கோடியே 52 லட்சம் பேரும், யூடியூபில் 45 லட்சம் பேரும் மோடியை பின்தொடர்கின்றன.

 

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தனது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகளை முடித்துக்கொண்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். மோடியின் டிவிட்டர் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் பிரதமர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்லாயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

தங்கள் ஆதரவாளராகவும், பக்கபலமாகவும், முன்னுதாரணமாகவும் உள்ள பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள சமூகவலைதளங்கள் மட்டுமே வழி என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் அண்மை சூழல்களால் மன வலிக்கு ஆளாக இருந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற உறுதியோடு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon