டெல்லி வன்முறை: துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் கைது

டெல்லி வன்முறையின்போது துப்பாக்கியை காட்டி காவல்துறையை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிஏ‌ஏக்கு ஆதரவாகவும், எதிராகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

 

வடகிழக்கு டெல்லியில் கடந்த 24-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறையின் போது சிவப்பு நிற ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் காவல்துறையை மிரட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், ஷாருக் என அடையாளம் காணப்பட்ட இளைஞரை டெல்லி காவல்துறையினர் தேடி வந்தனர். இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பதுங்கியிருந்தவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Leave a Reply