--- --:--:-- --

தமிழகத்தில் இன்று மழை வெளுக்கும்..!

3

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, படிப்படியாக நேற்று காலை வலுவிழந்தது.

 

 

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.அதேபோல, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

 

 

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 29-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon