டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிக்கு இண்டிகோ நிறுவன உணவகத்தில் அசைவ உணவு மறுக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்துள்ளது. டெல்லியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அனைவருக்கும் இண்டிகோவுக்கு சொந்தமான உணவகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அசைவ உணவு இருந்தபோதிலும் விமான பயணிகளுக்கு சைவ உணவே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பயணி ஒருவர் உணவை தேர்வுசெய்யும் அடிப்படை உரிமையை இண்டிகோ நிறுவனம் மறுத்துள்ளதாகவும் எந்த உணவை சாப்பிடவேண்டும் என தீர்மானிக்க வேண்டியது யார் என்றும் கூறி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம் அடுத்த முறை இது போல் நடக்காது என தெரிவித்துள்ளது. இருப்பினும் அதை ஏற்க மறுத்துள்ள விமான பயணி இன்டிகோ நிறுவனத்தின் கட்டளையால் தான் அசைவ உணவு மறுக்கப்பட்டது மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.