காதல் கணவரை குழந்தைகளுடன் தேடி அலையும் மனைவி

சாதியை காரணம் காட்டி பிரிந்து சென்ற காதல் கணவரை இரண்டு குழந்தைகளுடன் மனைவி தேடி அலையும் சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை ,உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

 

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பாவிதா மற்றும் இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு கணவர் சுரேஷ் தலைமறைவாகியுள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் என பாவிதா புகார் அளித்ததன் அடிப்படையில் சுரேஷை கண்டுபிடித்து சேர்த்து வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் சுரேஷ் தலைமறைவானர்.

 

அதிர்ச்சி அடைந்த பாவிதா குழந்தைகளுடன் கணவரைத் தேடி மதுரை மாநகர் பகுதியில் அலைந்து திரிந்து கொண்டுள்ளார். குழந்தைகள் சாலை விபத்தில் சிக்காமல் இருக்க இடுப்பில் கயிற்றால் கட்டி இழுத்து செல்லும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

 

இதற்கிடையே பசியின் காரணமாக பாவிதா மயங்கி விழுந்ததை பார்த்த பொதுமக்கள் சிலர் அவருக்கும் குழந்தைகளுக்கும் உணவு வாங்கி கொடுத்து மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர்.


Leave a Reply