--- --:--:-- --

5 வயது சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை!

11

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 5 வயது சிறுமியை அடித்து கொன்றது. சீனிவாஸ் என்பவரது மகளான சந்தனா என்ற சிறுமி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.

 

இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற வனத்துறையினர் அங்கு உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று சிறுமியை அடித்துக்கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. சிறுமியின் உடல் முட்புதருக்குள் இருந்து மீட்கப்பட்டு இருக்கும் நிலையில் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon