பனியால் உறைந்த ஏரியில் விமானத்தை இறக்கி சாதனை
ரஷ்யாவில் பனியால் உறைந்த ஏரியில் விமானத்தை இயக்கி விமான ஒருவர் சாதனை படைத்துள்ளார். உலகின் ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரி தற்போது பணியால் முற்றிலும் உறைந்து போயுள்ளது.
உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20 விழுக்காடு இந்த ஏரியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உறைந்து போன இந்த ஏரியில் சிறிய செஷ்ணா 172 வகை விமானத்தை இறக்க விமானி வெடின் மக்காரோ என்பவர் திட்டமிட்டார்.

ஆனால் எப்போது வேண்டுமானாலும் பணி உடையலாம் என்ற நிலை இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அதனையும் மீறி பாலம் பாலமாக பிளவு பட்டிருந்த இந்த ஏரியின் உறைந்த மேற்பரப்பில் விமானத்தை இறக்கி சற்று நேரம் கழித்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




