--- --:--:-- --

அமிதாப் பச்சனை தரக்குறைவாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்த அமர்சிங்

12

கடந்த காலங்களில் அமிதாப்பச்சனையும் அவரது குடும்பத்தினரையும் குறித்து இழிவாக பேசியதற்காக மன்னிப்பு கோரியுள்ளார் அமர்சிங். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான அமர்சிங் அமிதாப்பின் குடும்பத்தினருடன் நெருக்கமான நண்பராக இருந்தார்.

 

அமிதாபிற்கும் ,அமர்சிங்கிற்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டபோது அமிதாப் குடும்பத்தினரை குறிப்பாக ஜெயா பச்சனை அவர் கடுமையாக சாடினார். தற்போது நோய்வாய்ப்பட்ட அமர்சிங் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தமது தந்தையின் நினைவு தினத்தில் அமிதாபச்சன் அனுப்பிய இரங்கல் செய்தியால் மனம் நெகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் அமிதாப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் குறித்து தான் பேசியவற்றிற்காக வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon