கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிற தலைவர்களுக்கு அழைப்பு இல்லை
டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழாவில் முக்கிய தலைவர்கள், பிற மாநில முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்க போவதில்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி சட்டப்பேரவைக் குழு தலைவராக கெஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராம்லீலா மைதானத்தில் வருகிற 16-ஆம் தேதி கெஜ்ரிவால் பதவி ஏற்கும் நிலையில் எந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க போவதில்லை என முடிவு செய்து உள்ளதாக அந்த கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




