டெல்லி தேர்தல் முன்னணி நிலவரம்..! ஆம் ஆத்மி தொடர்ந்து முன்னிலை..!! பாஜகவும் சில இடங்களில் முந்துகிறது!!!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்தது போல ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவும் கணிசமான இடங்களில் முந்துகிறது. இருந்தாலும் அர்விந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்வது உறுதியாகியுள்ளது.

 

70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கு கடந்த 8-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டாலும், கடும் போட்டியை தராமல் ஒப்புக்கு நின்றதாகவே தெரிந்தது.

 

கடந்த 8-ந்தேதி நடைபெற்ற தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எண்ணிக்கையில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது.

 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மெய்யாகும் வகையில் ஆம் ஆத்மி அமோகமாக பெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. பதிவான வாக்குகளில் இதுவரை எண்ணிக்கை நிலவரப்படி ஆம் ஆத்மி 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது. பாஜகவுக்கு 43.5%, காங்கிசுக்கு வெறுமனே 4.5% மட்டுமே கிடைத்துள்ளது.

“தற்போதைய முன்னணி நிலவரம் :

மொத்த இடங்கள் : 70

ஆம் ஆத்மி ஆட்சி : 50

பா.ஜ.க. : 20

காங்கிரஸ் : 00”

 

முன்னிலை நிலவரம் இவ்வாறு இருக்க, தேர்தல் ஆணையம் தரப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி என்பது போல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

36 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் பற்றி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஆம் ஆத்மி 22 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஆனாலும் மூன்றில் 2 பங்குக்கும் மேலான இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிப்பதால், அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் அரியணையை தக்க வைப்பது உறுதியாகியுள்ளது. கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

 

அதே போல் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்கர்கள் பலரும் முன்னிலையில் உள்ளனர். ஆனால் டெல்லி பாஜக தலைவர் திவாரி பின்தங்கி உள்ளார். காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

 

தற்போதைய நிலவரப்படி டெல்லியில் மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என முன்னணி நிலவரம் மூலம் தெரிய வந்துள்ளதால் ஆம் ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply