“ஜோக்கர்” பட நாயகனுக்கு ஆஸ்கார் விருது..! “பாராசைட்” படம் சிறந்த படமாக தேர்வு!!
ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குu ன் போனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றார். சிறந்த நடிகையாக ஜுடி பட நாயகி ரெனி தேர்வானார். சிறந்த படமாக பாராசைட்டும் ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.
சர்வதேச திரையுலகின் மிகப் பெரிய விருது ஆஸ்கார் விருதாகும். 2020-ம் ஆண்டுக்கான 92-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆஸ்கார் விருதுக்காக உலகின் பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிப் படங்கள் போட்டியிட்டன.
இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குயின் போனிக்ஸ் தட்டிச் சென்றார். கடந்த 4 ஆண்டுகளாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட போனிக்ஸ், இந்த முறை விருதை தட்டிச் சென்றார். சிறந்த நடிகைக்கான விருது ஜுடி பட நாயகி ரெனி க்கு கிடைத்தது.
சிறந்த படமாக பாராசைட் என்ற தென் கொரிய திரைப்படம் தட்டிச் சென்றது. இதே படம் சிறந்த இயக்குநர், பின்னணி இசை, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதையும் அள்ளியது குறிப்பிடத் தக்கது. இதேபோல் சிறந்த துணை நடிகர், துணை நடிகை என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்திய மொழிப் படங்கள் எதுவும் எந்தப் பிரிவிலும் ஒரு விருது கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




