--- --:--:-- --

2019ம் ஆண்டில் மட்டும் ரூ.1.42 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய இன்ஸ்டாகிராம்

11

இன்ஸ்டாகிராம் நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் விளம்பரங்கள் வாயிலாக இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. புகைப்படத்தை பகிரும் அந்த செயலியை 2012 ஆம் ஆண்டில் சுமார் 5 ஆயிரத்து 903 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் வாங்கியது.

 

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் சுமார் ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயை வருவாய் ஈட்டியுள்ளது. ஃபேஸ்புக் 2019 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.

 

அதன் கால் பகுதிக்கும் அதிகமாக இன்ஸ்டாகிராம் வருவாய் ஈட்டியுள்ளது என்றும், இதேபோல கூகுளின் யூடியூப் செயலியை விடவும் இன்ஸ்டாகிராம் அதிக வருவாய் ஈட்டியுள்ளது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon