--- --:--:-- --

நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த வீரர் பூமி திரும்புகிறார்

12

சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சாதனை செய்த விண்வெளி வீரர் கிறிஸ்டியானோ கோச் இன்று பூமிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்தாண்டு மார்ச் 14ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற கோச் 379 நாட்கள் தொடர்ச்சியாக அங்கு தங்கியுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த வீரர் பட்டியலில் தற்போது அவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

 

இந்த காலகட்டத்தில் பூமியை அவர் 5,240 எட்டு முறை சுற்றி வந்துள்ளார். மேலும் 42 மணிநேரம் விண்வெளி மையத்திற்கு வெளியே செலவிட்டு உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

 

முன்னதாக கோச்சின் விண்வெளி நடைபயணத்தை பாராட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் அவருடன் தொலைபேசியில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. கோச்சின் இந்த சாதனை செவ்வாய் கிரகத்தின் மீதான சோதனைக்கு உதவும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon